Skip to main content

Posts

8. அக்ஷரப் பிரஹ்ம யோகம் - பகவத்கீதை - The Eternal Way

       THE ETERNAL WAY Author: Roy Eugene Davis பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)  Tamil Re-Phrasing, Reflections and Remarks  by V.R. Ganesh Chandar  ( V.R. கணேஷ் சந்தர்) பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் 8.  அக்ஷரப் பிரஹ்ம யோகம்   (பூரண சத்ய யோகம்) அத்தியாய முகவுரை: நிலைத்த சுயம்பு இருப்பான பேருணர்வே பூரணம் என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால், அதற்கும் மேலானது எதுவுமில்லை. இயற்கையின் குணங்களால் உருவான மனதால் அதன் உருக்காட்சி புலப்படாது. உள்ளுணர்வாலும் நேரடி அனுபவத்தாலும் அதன் இருப்புண்மையை விளங்கிக் கொள்ளலாம். அர்ஜுனன் கேட்டான்:  8.1. பூரண சத்யமாகிய பிரஹ்மம் என்றால் என்ன ?  உன்னத ஆத்மா (அத்யாத்மா) எது? கர்மா என்றால் என்ன? உலகங்கள் (அதிபூதம்) மற்றும் தேவதைகள் (அதிதைவதம்) எனும் மூலக்கூறுகளின் ஆட்சியெல்லை மற்றும் தன்மை என்ன? உட்பொருள்: பூரண, சர்வ வியாபக, வரம்பற்ற பேருணர்வு என்பது யாது? தலைமையிலுள்ள ஆத்மப் பேருணர்வு எது? எது கர்ம விளைவுக்குக் காரணம் ? உலகங்கள் மற்றும் அவைகளை நியமமாக இயக்கும் தலைதேவதைகள் எனும் மூலக்கூ...

7. ஞான விக்ஞான யோகம் - பகவத்கீதை - The Eternal Way

       THE ETERNAL WAY Author: Roy Eugene Davis பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)  Tamil Re-Phrasing, Reflections and Remarks  by V.R. Ganesh Chandar  ( V.R. கணேஷ் சந்தர்) பகவத் கீதை ஏழாம் அத்தியாயம் 7.  ஞான விக்ஞான யோகம்   (விவேகித்த விசாரணை மற்றும் ஞானானுபூதி யோகம்) அத்தியாய முகவுரை: ஒவ்வொருவரும் மனம் மற்றும் உடற்செயல்கள் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால், அவர்களின் உள்ளத்தின்  அடியாழத்தில், தங்களின் உண்மையான சொரூபம் என்ன என்றும், இறைச்சொரூபம் பற்றியும் முழுமையாக அறிய விரும்புகிறார்கள்.  ஆயினும், எதை யாரும் பொதுவாக உணரவில்லை அல்லது ஏற்கவில்லை என்றால், நம் தினசரி வாழ்சூழல் மற்றும் உறவு வட்டத்திலேயே இவ்வுயர்ஞானத்திற்கு விழிப்புப் பெற்று,  அதை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும் என்பதுதான்.   எல்லா மனிதகுலப் பிரச்னைகளின் குழப்பங்களையும், துயரங்களையும் முடிவுக்குக் கொண்டவரக்கூடிய தீர்வானது, நாம், இறைமையுடன் உறவு வைத்துள்ள ஆன்மீக வியக்திகள் என உணர்வதும், அந்த உறவு நமக்கு பிரயோஜனமாக ஊட்டம் கொடுக்க அனுமதி...

The Holy Science by Swami Sri Yukteshwar Giri - Sanskrit only

ॐ श्री विग्नेश्वराय  नमः श्री गुरुभ्यो नमः ॐ नमो भगवते श्री परमहंस योगानन्दाय सद्गुरवे नमः  ज्ञानावतार स्वामि श्री युक्तेश्वराय नमः स्वामि श्री युक्तेश्वरेण प्रणीतम्  कैवल्य दर्शनम्    --- Kaivalya Darsanam The Holy Science by   Swami Sri Yukteshwar Giri (Sankrit only) --- I. वेद: 1. नित्यं पूर्णम्-अनादि-अनन्तं ब्रह्म परम् | तत्-एव-एकम्-एव-अद्वैतं सत् || 2. तत्र सर्वज्ञ-प्रेम-बीजम्-चित् सर्वशक्ति-बीजम्-आनन्दश्च || 3. तत्-सर्व-शक्ति-बीज-जड-प्रकृति-वासनाया व्यक्त-भाव: | प्रणव-शब्द: दिक्-काल-अणौ-अपि तस्य रूपाणि || 4. तदेव जगत्-कारणं माया ईश्वरस्य, तस्य व्यष्टिर्-अविद्या || 5. तत्-सर्वज्ञ-प्रेम-बीजं परं तदेव कूटस्थ-चैतन्यम् | पुरुषोत्तम: तस्य-आभास: पुरुष: तस्माद्-अभेद: || 6. चित्-सकाशाद्-अणोर्-महत्त्वं तत्-चित्त्वं, तत्र-सत्-अध्यवसाय: | सत्त्वं बुद्धि: ततस्तत्-विपरीतं मन: चरमे-अभिमानो-अहङ्कार: तदेव जीव: || 7. तत्-अहङ्कार-चित्त-विकार-पञ्च-तत्त्वानि ||  + 8. तान्येव कारण-शरीरम् पुरुषस्य ||  + 9. तेषां त्रिगुणेभ्य: पञ्चदश विषय-इन्द्रियाणि ||  + 10. ...

பதஞ்சலி யோக சூத்திரம் (தெளிவுரை) - PATANJALI YOGA SUTRAS

பதஞ்சலி யோக சூத்திரம் (தெளிவுரை)  PATANJALI YOGA SUTRAS Tamil Translation & Re-Phrasing by : பரமஹம்ஸ தாசன் "Phd" Siva ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம: ஸ்ரீ குருப்யோ நம: ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம: ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி  ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி  பொருளடக்கம்      பதஞ்சலி யோக சூத்திரம் - I. ஸமாதி பாதம் பதஞ்சலி யோக சூத்திரம் - II. சாதனா பாதம் பதஞ்சலி யோக சூத்திரம் - III. விபூதி பாதம் - சித்திகள் பதஞ்சலி யோக சூத்திரம் - IV. கைவல்ய பாதம் - முக்தி உரையாசிரியர் குறிப்பு: மகா பிரசித்தி பெற்ற மகரிஷி பதஞ்சலி முனிவரின் "பதஞ்சலி யோக சூத்திரம்", இங்கு சுருக்கமாக தமிழில் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.  முக்கியமாக,  இது உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் சீடரான  ஸ்ரீ  ராய் யூஜீன் டேவிஸ் எழுதிய  பதஞ்சலி யோக சூத்திர உரை நூலையும் [i],  ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்  அனுக்கிரகித்த  பதஞ்சலி யோக சூத்திர உரையான  "...

பதஞ்சலி யோக சூத்திரம் - IV. கைவல்ய பாதம் - முக்தி

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம: ஸ்ரீ குருப்யோ நம: ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம: ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி  ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி  பதஞ்சலி யோக சூத்திரம்  IV.  கைவல்ய [i] பாதம் - முக்தி  1. [நல்வினையுடன் கூடிய] பிறப்பு, மருந்து, மந்திரம், தவம் ஆகியவைகளாலும் தியான சமாதியினால் அடையக்கூடிய சித்திகளைப் பெறமுடியும். 2. ஜீவராசிகளில் [உடல், மனங்களின்] பரிணாம வளர்ச்சியை இயற்கை தக்க சூழ்நிலைகளை நிரப்பி [உருவாக்கி] ஏற்படுத்துகின்றது; இது தொடர்ந்து ஜன்மாந்தரமாகவும் நடைபெறுகின்றது. 3. ஒருவரது செயல் இயற்கையின் செயலை நேரடியாகப் பாதிக்காது; ஆயினும் உழவன் [தன் வயலுக்கு குளத்துநீர்பாய்ச்ச வரப்பிலுள்ள] தடைகளை அகற்றுவது போல், தனது மனத்தை மூடிய இருள் திரையை அகற்ற அந்தச் செயல் பிரயோஜனமாகும். 4. அகங்கார தனித்துவத் தன்மையினால் ஜீவராசிகளில் தனித்தனியாகச் சித்தம் உருப்பெறுகின்றது.  5. ஜீவராசிகளில் சித்தங்களின் செயல்கள் பலவேறுபட்டாலும் அவையாவும் [பிரபஞ்சத்தை இயக்கும் கடவுளின்] ஒரு பெரும்சித்தத்தின் அம்சங்களா...

6. தியான யோகம் - பகவத்கீதை - The Eternal Way

     THE ETERNAL WAY Author: Roy Eugene Davis பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)  Tamil Re-Phrasing, Reflections and Remarks  by V.R. Ganesh Chandar  ( V.R. கணேஷ் சந்தர்) பகவத் கீதை ஆறாம் அத்தியாயம் 6. தியான யோகம்   அத்தியாய முகவுரை: இறைவனின் நேர்மையான சாதகர்களுக்குத் தியானம் என்பது மிகவும் உதவிகரமான  ஆன்மீக வளர்ச்சி வழிமுறையாகும். பிரபஞ்ச உணர்வுக்கு, இறையுணர்வுக்கு, உயர்நிலைக்கான முன்னேற்றத்திற்கு இயல்பான திறவாகிட அனுமதிக்கும் சமாதிநிலைக்காக தியானத்தை சரியாகக் கற்று சிரத்தையுடன் செய்வது அவசியம். ஆன்ம ஞானத்திற்கு பக்தி மார்க்கத்தை முன்னிலைப்படுத்தும் உரையாசிரியர்கள் இந்த அத்தியாயத்தின் செய்தியை மேம்போக்காகப் பார்க்கிறார்கள். அல்லது இது அலட்சியத்திற்குரியது எனும் தவறினைப் புரிந்துவிடுகிறார்கள்.  அர்ஜுனன் உண்மைக்கு விழிப்படைதலை விவரிக்கும் கீதை இறைமைக்கு உரிமை கோரும் பேரார்வம் உள்ள எல்லா ஆன்மாக்களின் சுயசரிதையாகும்.  முதல் அத்தியாயத்தில் கூறியது போல, ஒளியூட்டம் பெறாத மனத்தில் ஊன்றிப் பழகிவந்த போக்குகளுக்கும் முழுமைக்கு...