THE ETERNAL WAY
Author: Roy Eugene Davis
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar ( V.R. கணேஷ் சந்தர்)
முன்னுரை
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (
முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Re-Phrasing
அட்டைப்படம் உள்பக்கம்
1. பகவத்கீதைக்கு ஆதிசங்கரரின் விரிவுரை மிக ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது
2. பகவத்கீதை மிகவும் மதிக்கப்படும் ஒரு யோகா கிரந்தமாகும்
3. இந்து மதத்தின் வெவ்வேறு தத்துவ உட்பிரிவுகள் தங்களின் ஆதாரத்தை பகவத்கீதையில் காண்கின்றன
4. திரு. ராய் யூஜின் டேவிஸ், கிரியா யோகத்தின் வெளிச்சத்தில் பகவத்கீதையின் உட்பொருளை விவரிக்கிறார்
5. கடவுள் இருக்கிறார் எனும் உண்மை, பிரபஞ்சத்தின் வெளிப்பாடு நடைபெறும் வளர்போக்கு, ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் உயர் அறிவும், ஆத்ம முழுமையும் ஆகியன பகவத்கீதையில் 700 சுலோகங்களில் புரியவைக்கப்படுகின்றன
6. சுய விழிப்புணர்வு பெறவும், ஆக்கபூர்வ செயற்பாடுகளில் ஈடுபட்டு சொந்தக் கடமைகளைச் செய்யவும், கிரியா யோகா செய்யவும்
பகவத்கீதை ஊக்கமூட்டுகிறது
7. கிரியா என்றால் செய்கை. யோகா என்றால் இணைப்பு.
8. ஆத்ம விழிப்புணர்வை இறைவனுடன் இணைப்பது சமாதி.
ஆ சிந்தனைக்கீற்று Reflections
மூலச்சுலோகம் அடங்கிய நூல் அதாவது கிரந்தம்.
மூலச்சுலோகங்களும் பதவுரை, விளக்கவுரை அடங்கிய நூல்.
மூலச்சுலோகம் விளக்கவுரை, விரிவுரை அடங்கிய நூல்
என மூன்று வகை நூல்களில் Eternal Way மூன்றாவது வகை. அதில் மூலச்சுலோகங்கள் இல்லை. அந்த இடத்தில் அதன் ஆங்கில அர்த்தம் உள்ளது.
15.4.2020
முன்னுரைக்கு முன் உள்ள பக்கம்
இதில் ஒரு வேத மந்திரம் உள்ளது
கருத்துச்சுருக்கம் Rephrashing
16.4.2020 ஆசிரியரின் கூற்று
கருத்துச்சுருக்கம் Rephrasing
முதல் 2 பாரா ஏற்கனவே அட்டை உள்பக்கம் 14 4 2020 ல் உள்ளது…….அதன் தொடர்ச்சியாக….
1. கீதையின் மையக்கரு
அ. நாம் செய்யும் அனைத்தும் இறைவிருப்பத்திற்கு உட்படுத்திச் செய்தல்
ஆ. அதாவது, பரிணாம நோக்கத்திற்கு உட்படுதல்
இ. ஆத்ம விழிப்புணர்வை அறிதலுக்கும் கட்டுடைத்தலுக்கும் அனுசரணையாக இருத்தல்
2. இதனால்
அ. இயற்கையுடன் இசைந்த வாழ்வும்
ஆ. அகங்காரத்தின் சுத்தீகரிப்பும்
இ. ஆத்மாவின் லட்சியத்தின் நிறைவேற்றமும்
சாத்தியமாகிறது
3. என் குருவாகிய பரமஹம்ச யோகாநந்தரிடமிருந்து அவருடைய வார்த்தை வழியாகவும் அவரே வாழ்ந்து காண்பித்த வழியிலும் நான் கற்றவை
அ. கடவுளை எவ்வாறு அறிவது ?
ஆ. பொய்யிடமிருந்து உண்மையை விவேகித்துப் பிரித்தறிதல்
இ. உள்காட்சித் தூண்டலால் வாழ்வது
ஈ. அனைத்து ஆத்மாக்களிடமும் இயல்பாய் குடிகொண்டுள்ள வளர்முகத் திறவு நடைபெற எவ்வாறு அனுசரணையாய் இருப்பது
4. S ராதாகிருஷ்ணன், ஆதிசங்கரர், ஸ்ரீயுக்தேஷ்வர், லாஹிரி மஹாசாயா ஆகியோரின் கீதை விரிவுரைகள் உதவியாயிருந்தன.
17.4.2020 முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. வாழ்க்கையின் வளர்போக்குகளைப் புரிந்துகொள்ளவும், உள்ளுணர்வுக்கு ஒளியூட்டுவதும், ஆத்மாவை விடுவிப்பதும் நோக்கமாகக் கொண்ட, வேகமான அதிகாரப் பூர்வ வழிகளை அனுசரிக்க ஆர்வமுறும் ஒவ்வொருவருக்கும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள உண்மைகள் பெருமதிப்பு மிக்கவை.
2. சாதாரண தோற்றமாயை கொண்டுள்ள, புலனாளும் இந்த மனித இருப்பு,பெரும்பாலும் துன்பம் மிக்கதாகவும், அர்த்தப்படும் காரணங்கள் அற்றதாகவும் உள்ளது
3. எது தேவை என்றால்
a. ஆத்மாவின் உள்ளொளியால் வெளிச்சமாக்கப்படும் மனம்
b. ஆத்மாவின் முடிவெடுப்புச் சுதந்திரத்திற்குக் கட்டுப்படும் புலன்கள்
4. இதனால்
a. ஆத்ம உள்ளுணர்வு உள்ளும் புறமும் விரவுகிறது
b. ஆத்ம தூண்டலின் திசை காட்டலில் வாழ்க்கை நடக்கிறது.
c. இதனைத்தான் கருணை என்கிறார்கள்
5. இந்தக் கருணை, கடவுளின் ஆத்மா (நம்மில்) குடிகொண்டுள்ளதான தன்மையினை ஆட்கொண்டு வாழ்விற்கான காரணத்தைப் பூர்த்தி செய்கிறது.
1. நாம் கீழ்கண்டவைகளுக்கு வழி நடத்தப்படுகிறோம்
• உடல் தளத்தில் வைத்துப் பொருத்திக் கொள்ளும் ஆத்ம—மன—உடல் இருப்பாகிய நாம், புலன் தூண்டலாலும்,, உள்ளுணர்வுத் தூண்டலாலும் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள
• சவாலில் தேறுவதற்கும், பாதுகாப்பு, நலம், மற்றும் தொடர்வளர்ச்சி ஆகியனவற்றுக்குத் தேவையான அத்யாவஸ்யமானவைகளில் திருப்தியடைய
2. இதற்காக
• இயற்கையின் வளர்போக்கு
• வாழ்க்கையை வளர்ப்பதான அபிலாஷைகளை எளிதில் நிறைவேறுதல்
• தேவைகளின் இயல்பூக்கத் திருப்தியை அனுபவித்தல்
• நம் ஆத்ம பொக்கிஷத்தை அறிதலும் அதற்குத் திறவாகுதலும்
ஆகியவற்றுடன் உள்ளார்ந்த இசைவுடன் வாழ விரும்புகிறோம்
3. ஆத்ம விழிப்புணர்வு சரியாக அறியப்படாத போது, நம்முடைய பெருமளவு கவனம், உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளை திருப்திப் படுத்துவதாய், ஆத்ம வளர்ச்சியை அலட்சியம் செய்வதாய் இருக்கப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.
4. இந்த நடத்தைகள் மேம்போக்கான மனித மகிழ்ச்சிக்கு இட்டுச் சென்றாலும், ஆழ் இதயத்தில் குடிகொண்டுள்ள, மனிதனின் உண்மைச் சாரமான இறை அனுபவத்தையும், ஆத்ம ஞானத்தையும் எழுப்பும் அவாவைத் தணிப்பதில்லை.
21.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (1).
சந்திர வம்சத்து அரசன் சந்தனு, கங்கை நதிக்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, கங்கை நதியின் பெண்ணுருவத்தைத்தான் பார்க்கிறோம் என்று அறியாமல், அவளைத் தன் மனைவியாக இருக்க வேண்டினான். திருமணம் செய்துகொண்டபின் தான் செய்யும் எதனையும் கேளவி கேட்கக்கூடாது என்றும் அவ்விதம் தலையிட்டால் விட்டுப்பிரிவது எனும் நிபந்தனையுடன் அவள் ஒப்புக்கொண்டாள்.
ஆனால், கங்கை தன் முதல் ஏழு குழந்தைகளை கங்கையில் வீசும் வரை மௌனம் காத்த அரசன், எட்டாவது குழந்தையையும் அவ்வாறு செய்யப் போகும்போது மனம் தாளாமல் கேட்டுவிட்டான். நிபந்தனையின்படி, கங்கை, அந்தக் குழந்தையை அரசனிடம் விட்டுவிட்டு கங்கையில் மூழ்கிக் கரைந்தாள்.
சந்தனு, தன் மகன் தேவவிரதனுடன் வாழ்ந்து வருகையில். வேட்டைக்காக காட்டுக்குச் சென்றான். ஆங்கே, தசராஜன் மகளான சத்யவதியின் அழகில் மயங்கி, தசராஜனிடம் சந்தனு பெண் கேட்டான். அதற்கு தசராஜன் தன் மகளே அவனுக்குப் பிரதம மனைவியாயிருக்க வேண்டும் என்றும் அவளுக்குப் பிறக்கும் மகனே முடிசூட்டப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தான்.
சந்தனு இந்நிபந்தனைகளை மறுத்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினாலும் வருத்தத்துடன் இருந்தான். இதனைக் கவனித்த மகன், காரணத்தை ஊகித்தறிந்து, காட்டுக்குச் சென்று தசராஜனிடம் அவனுடைய நிபந்தனைகளை ஏற்பதாகவும் உறுதி கூறினான். இதனால், இவனுக்கு பீஷ்மர் எனப் பெயரானது. இதற்கு வெல்லமுடியாத, வலிமை மிக்க என்று பொருள்.
22.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (2).
சந்தனு—சத்யவதி திருமணத்திற்குப் பின், அவர்களுக்குப் பிறந்த சித்ராங்கதன், விசித்ர வீர்யன் எனும் இரண்டு மகன்களில் முதலாமவன் சிறுவயதில் இறந்துவிட்டான். இரண்டாமவன் பலவீனன். சந்தனுவின் மரணத்திற்குப் பின், அவன் பெரியவனாகி முடிசூட்டப்பட்டாலும், ஆட்சிப்பொறுப்பு பீஷ்மரைச் சேர்ந்தது.
விசித்ரவீர்யன் இளைஞனான போது, அவனுக்குத் திருமணம் செய்விக்க நினைத்த பீஷ்மர், காசி மன்னன் அறிவித்த சுயம்வரத்திற்கு அவனை அழைத்துச் சென்றார். காசி மன்னனுக்கு திருமண வயதில் மூன்று மகள்கள் இருந்தனர். சுயம்வரக்கூட்டத்தில் அவர்கள் தனிமைப்பட்ட போது, பீஷ்மர் அம்மூவரையும் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்.
அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்பன அவர்களின் பெயர்கள். அவர்களில், அம்பா, தான் வேறொருவனைக் காதலிப்பதாகவும், விட்டுவிடுமாறும் வேண்டிக்கொண்டதால், அவள் விடப்பட்டாள்.
பிற இருபெண்களையும் மணந்த விசித்ரவீர்யன், பலவீனம் காரணமாக இறக்க நேர்ந்தது. இரு பெண்களும் வேதவியாசருக்கு அறிமுகம் செய்யப்பட்டார்கள். அவர் மூலமாக அம்பிகாவிற்கு கண்பார்வையற்ற திருதராஷ்ட்ரன், அம்பாலிகாவிற்கு பாண்டு எனும் புத்திரர்கள் பிறந்தார்கள். இருவரும் பெரியவர்களானபோது, பார்வையற்ற திருதராஷ்ட்ரனை விட்டு, பாண்டுவை மன்னராக்கினார்கள்.
பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி எனும் இரண்டு மனைவிகள். திருமணமாகுமுன்பே, குந்திக்கு, தான் கற்ற ஒரு மந்திரத்தை சூரியனிடம் ஓதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் அது முறை தவறிப் பிறந்த காரணத்தால் ஒரு தச்சனுக்கு தத்து கொடுக்கப்பட்டு, கர்ணன் எனும் பெயரில் வளர்ந்தான்.
இறை சக்தியால் குந்தி, தர்மத்தைக் கட்டுப்படுத்தி யுதிஷ்டிரரையும், பிராணனைக்கட்டுப்படுத்தி பீமனையும், இந்திரனைக் கட்டுப்படுத்தி அர்ஜூனனையும் மகன்களாகப் பெற்றெடுத்தாள். அவள், அந்த மந்திரத்தை மாத்ரிக்கு கற்றுக்கொடுத்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஆனால், அதனை இரண்டு தெய்வங்களுக்குப் பிரயோகித்து, இரட்டையர்களான நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் என்பதால் பாண்டவர்கள் என ஆழைக்கப்பட்டனர்.
பஞ்சபாண்டவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். துருபத மன்னன் தன் மகள் திரௌபதிக்கு மாப்பிள்ளை தேட சுயம்வரம் நடத்தினான். சுற்றிக்கொண்டிருக்கும் சக்கரத்தின் மேல் உள்ள ஒரு மீனின் கண்ணை, தரையில் இருக்கும் தண்ணீர்த் தேக்கத்தில் அதன் நிழலைப் பார்த்து அம்பு எய்ய வேண்டும் என்பது போட்டி. அர்ஜூனன் அதில் வென்று, அனைவரும் இல்லத்திற்குத் திரும்பி வாசலில் நின்று தாயான குந்தியை அழைத்தனர். அவளோ, “எது கொண்டு வந்திருந்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்” பதில் கூறிவிடவே, திரௌபதி ஐவருக்கும் மனைவி ஆனாள்.
23.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (3).
கண்பார்வையற்ற திருதராஷ்ட்ரன் 100 மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். பாண்டு இறந்த பிறகு திருதராஷ்ட்ரனின் முதல் மகனான துரியோதனன், தன் தந்தைக்கு மறுக்கப்பட்ட ஆட்சிப் பதவி தனக்கே என உரிமை கொண்டாடினான். ஆனால், யுதிஷ்டிரனுக்கு ஆட்சிப்பொறுப்பு வழங்கப்பட்ட போது, சூழ்ச்சி செய்து அவனை ஆட்சியிலிருந்து இறக்கப் பார்த்தான். சூழ்ச்சிக்காரன் ஒருவனின் ஆலோசனையின் பேரில் துரியோதனன், யுதிஷ்டிரனை சதுரங்க சூதாட்டத்திற்கு அழைத்தான். வெல்பவருக்கு ராஜ்யம், தோற்பவருக்கு 12 ஆண்டுகள் வனவாசம், 1 ஆண்டு அக்ஞாத வாசம் என முடிவானது. போட்டியில் தோற்ற யுதிஷ்டிரன் தன் நான்கு சகோதரர்களுடனும், திரௌபதியுடனும் வனவாசம் சென்றான்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சபாண்டவர்கள் திரும்பி வந்து ஆட்சிப்பொறுப்பு கேட்டபோது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பாரதப்போர் நடத்த முடிவானது. கிருஷ்ணன், பாண்டவர்களின் அத்தை மகன், தன் சைன்யம் ஒரு பக்கமும், தான் ஒரு பக்கமும் இருக்க விரும்புவதாகவும், படைகள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டான்.
24.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
இந்தக் கதையைப் பற்றி என்ன நினைப்பது ? (இங்கு கதையின் போக்கினை மீண்டும் சுருக்கமாகப் பட்டியலிடுகிறார்) இந்த நாடகத்தைப் புரிந்து கொள்ள, கதாபாத்திரங்களின் பெயர்களின் அர்த்தத்தையும், அவர்களின் செயல் மற்றும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனைச் செய்ய
----நாடகத்தில் பங்கேற்பவர்களின் விசேஷித்த நடத்தைகளையும்
---மரபு வாரிசு முறையின் பூடகப்பொருளையும்
எண்ணிக்கைகள் மற்றும் உணர்வு மண்டல அலகுகளின் வகைப்பாட்டினை விளக்கும் சாங்கியம் எனும் தத்துவப்பிரிவின் அடிப்படையில் ஆராயவேண்டியுள்ளது.
25.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
இனி, இந்தக் கதைப்பகுதியின் பெயர்களின் பூடக அர்த்தத்தை ராய் கூறியவாறு பார்ப்போம்
சந்தனு (தூய உணர்வு) கங்கையுடன் (ஓம் நுண்ணறிவு) தொடர்பு கொள்கிறார். இதனால், பேருணர்வின் எட்டு பாகங்கள் உருவாகின்றன. அவைகளில் ஏழு அகவயமானவை. ஒன்று புறவயமானது.
அகவய பரவெளி வளர்போக்குகளை கட்டுப்படுத்தும் அந்த மறைவான ஏழு பாகங்களாவன:----
1. படைப்பின் காரண சக்தி சமஷ்டி
2. படைப்பின் காரண சக்தி வியஷ்டி
3. படைப்பின் சூக்ஷம சக்தி சமஷ்டி
4. படைப்பின் சூக்ஷம சக்தி வியஷ்டி
5. படைப்பின் ஸ்தூல சக்தி சமஷ்டி
6. படைப்பின் ஸ்தூல சக்தி வியஷ்டி
7. அனைத்தையும் தழுவியதான ஒரு பாகம்
சில மதங்களில் இவை கடவுள்களாகக் காட்டப்பட்டாலும், இவை வெவ்வேறு தன்மைகள், செல்வாக்குகள் மற்றும் சக்திகள் கொண்டவையாகும்.
26.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
ஆ சிந்தனைக்கீற்று Reflection
திரௌபதி, ஐந்து சக்கரங்களுக்கும் சக்தி அளிக்கும் குண்டலினி சக்தி
27.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. படைப்பின் காரண சக்தி சமஷ்டி (முழு)
2. படைப்பின் காரண சக்தி வியஷ்டி (பின்னம்)
இவை இரண்டும் இந்து வேதத்தில் விஷ்ணு என்றும்,
விஷ்ணு, பதம் மாறாமல் காப்பவர் என்றும்
3. படைப்பின் சூக்ஷம சக்தி சமஷ்டி
4. படைப்பின் சூக்ஷம சக்தி வியஷ்டி
இவை இரண்டும் இந்து வேதத்தில் பிரம்மா என்றும்,
பிரம்மா விரிவடைபவர் என்றும் பிரபஞ்ச வெளிப்பாட்டின் காரணமாகவும்
5. படைப்பின் ஸ்தூல சக்தி சமஷ்டி
6. படைப்பின் ஸ்தூல சக்தி வியஷ்டி
இவை இரண்டும் இந்து வேதத்தில் சிவன் என்றும், மகேஸ்வரன் என்றும் மாற்றங்களை நிகழ்த்துபவர் என்றும் விவரிக்கப்படுகின்றனர்.
ஏழாவதான, இறையாத்மா, இந்த ஆறினுள்ளும் மறைவாக, ஆனால் கட்டப்படாமலும் தடுக்கப்படாமலும் உள்ளது.
குறிப்பு – பிரபஞ்சத்தை வெளிப்படுத்தி வாழவைக்கும் உணர்வின் வெளியாகு பகுதி மனித உடம்பினையும், பிற உயிர்களின் உடம்பினையும் வெளிப்படுத்தி வாழவைக்கிறது. தூய பேருணர்வு, பிரபஞ்சத்தில் விரவியும் ஆன்மாக்களாக பாகங்கள் ஆக்கப்பட்டும் இருக்கிறது. சுய விளக்க அறிவால் திறவாகும் ஆன்மா, அதன் அறிவை பிரபஞ்ச பேருணர்வுக்கும் –இந்த இரண்டின் ஒன்றாகுதலுக்கும் ஆன்ம விடுவிப்புக்கும் திருப்பி அளிக்கிறது
28.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
எட்டாவது, மறைவற்ற, பிரபஞ்ச மூலப்பொருள், பீஷ்மர், பேருணர்வின் தனித்துவ, சாட்சிபூத அலகு, வெளி விஷயங்களில் ஈடுபட்டாலும், முடிவுத்தீர்ப்பு நிர்ணயிப்பது அல்ல.
பீஷ்மர், திருமணம் செய்து கொள்ளாததினால் (படைப்புக் காரியத்திலிருந்து விலகியிருப்பது) அவர் ‘யாரையும் உருவாக்கவில்லை.
இவரும் இறையாத்மாவும் பேருணர்வின் இரண்டு முகங்கள். பீஷ்மர், புறவய இயற்கையின் வெளி உருவம். இறையாத்மா அகவயமானது
எங்கும் வியாபித்துள்ள இறையுணர்வு, சமஸ்க்ருத மொழியில் கூடஸ்த சைதன்யன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உச்சியாயிருக்கும் ஒரு அம்சம் என இந்து மதத்தில் சிலர் இதனை கிருஷ்ணப் பேருணர்வு என அழைக்கின்றனர். சில பக்தர்கள் இதனுடனான தங்கள் உறவு நெருக்கத்தை உணர தன்னிச்சையாய் வர்ணிக்கின்றனர்.
29.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
உணர்வின் உயீரூட்ட அம்சமான இறையாத்மாவானது, உணர்வு கடந்த மூல இயற்கை (உண்மையின், அதாவது ,”சத்” தின் உருவ வெளிப்பாடான சத்யவதி). மூல இயற்கையை உருவாக்கி அதன் வெளிப்பாட்டுக்குரிய மாற்றங்களை அடைய தொடர்பு கொள்கிறது. இந்த மூல இயற்கை, ஓம் மற்றும் அதன் அம்சங்களான தேசம், காலம், மற்றும் கலனம் என்னும் பிரபஞ்ச சக்திகளாகும்.
அவளுடைய முதல் மகன், சித்ராங்கதன், அதிக ஆயுளில்லாததானது, அருவிலிருந்து பருவுக்கு சிறிது காலத்தில் மாற்றமடைந்ததைக் குறிக்கிறது.
அஹங்காரத்தினை குறிப்பதான இரண்டாவது மகன், விசித்ர வீர்யன், தன் இச்சையில் தோற்றம் பெறுவதாக ஒரு மாயையில் இருப்பவன் என்றாலும், விசித்ரமாகத் தோன்றினாலும், (அவீர்ய) பலமற்றவனாகத் தோன்றினாலும், படைப்புக்கு அது தேவையே. அது சுருங்குவதாலும், கற்பனைத் தோற்றம் உடையதாக இருப்பதாலும், அது சக்தியற்றது. அது அறிவை மறைப்பதன்றி, அறிவு கொண்டதல்ல.
30.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Re-phrasing
அஹங்காரம் ஆன விசித்ரவீர்யனின் இரண்டு மனைவிகள்,
• சந்தேகம் (அம்பிகா),
• விவேகம் (அம்பாலிகா).
இன்னொருவனைக் காதலிப்பதால் விடப்பட்ட அம்பா, தாழ்வுதளச் சக்கரங்களின் தூண்டுதல் பெற்றவளாக கருதவேண்டும்.
விசித்ரவீர்யன் இறந்துவிட்டதால், இவர்கள் இருவரும் வேதவியாசருக்கு (ஞானம்) அறிமுகம் செய்யப்பட்டு, அவர் மூலமாக,
• (சந்தேகம்) அம்பிகாவுடன் கண்பார்வையற்ற …… திருதிராஷ்டரனும்,
• (விவேகம்) அம்பாலிகாவுடன் ……. பாண்டுவும்
பிறந்தனர்.
1.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
த்ருதராஷ்டரனுக்கு 100 மகன்கள், 1 மகள். குருட்டு அல்லது மயக்குறு மனம், உணர்ச்சியால் ஆளப்பட்டு எண்ணற்ற சுவாபிமானத் தன்மைகளை உருவாக்குகிறது. அவர்களில் முதலாவதான துரியோதனன் (வேட்கை, முறியடிக்க முடியாததும், பல பிரச்னைகளை உருவாக்குவதுமான கீழான ஆசைகள்)
பாண்டு, திருதராஷ்ட்ரன் இருவருமே குரு வம்சத்தவர்களாக இருந்தாலும் பீஷ்மர் உதவியுடன் ஆண்டதால் திருதராஷ்ட்ரனே அவ்வம்சத்தின் முக்கியப் பிரதிநிதியாகக் கருதப்படுகிறான்.
2.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பாண்டு, தன் இரு மனைவிகள் – குந்தி (குண்டலினியின் ஈர்ப்பு சக்தி, வேட்கையற்ற இரக்கம், தவறுகளை முறியடிக்கும் விவேகித்த சிந்தனை) –மற்றும் மாத்ரி – இயல்பூக்கத்தில் தூண்டப்படும் நுண்ணறிவு – இவர்கள் காட்டில் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். அதாவது, அவர்கள் தங்களை மனஎழுச்சிகளிலிருந்து (ராஜ்ய காரியங்களிலிருந்து) விடுவித்துக் கொண்டனர்.
உடம்பின் முன்பாகம் உடல், மன இயக்கங்களுக்கும், பின்பாகம் (முதுகெலும்பு) ஆன்மீக இசைவுக்கும் ஆனதென யோகிகள் கூறுகின்றனர்.
திருதிராஷ்டரனின் மகன்கள் கௌரவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மனதிலிருந்து முளைப்பதான சுயநலம், அழிவுப்போக்குகள் என்றும், ஆன்ம ஒளி கூட்டும் புரிதலை அடைய விழையும் உயர் இச்சைகளுக்கு எதிரிகள் எனவும் புரிந்துகொள்ள வேண்டும்.
தூய அறிவு ஆகிய பாண்டு தனியாக இருக்கிறார்.
மனம், திருதிராஷ்டரனைப் போல, ஜட அம்சங்களை ஆள்கிறது
3.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing அட்டவணை வடிவத்திற்கு பொருத்தமானது
4.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
அட்டவணை வடிவத்திற்கு பொருத்தமானது
திரௌபதி, குண்டலினி சக்தி அதாவது, படைப்பின் உடலளவு பிரதிநிதி. இவளின் ஐந்து மகன்கள் என்பவர்கள் குண்டலினியால் சக்தியூட்டப்பட்ட சக்கரங்களிலிருந்து வெளியாகும் ஒளி, ஒலி அலைகள்.
சதுரங்கம் விளையாடியது
ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் ஆத்மா தன் உணர்வில் வளரும்போது,, மனவெழுச்சிகளுடன் கூட்டிணைவது என்பது புத்தி பேதலிப்பில் முடியும். இதனைச் சரி செய்ய, ஆன்மீக முயற்சியாளன் சில காலம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஆன்மீக முயற்சிகளை முடுக்கி விட்டு, பின் மீண்டும் தான் தோற்றுப்போன தன் மனவெழுச்சிகளைச் சந்தித்து, தன் வெற்றியை உறுதி செய்தலானது, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றதும், மீண்டும் போரிட வந்ததும் குறிக்கிறது.
பார்த்த சாரதி
கிருஷ்ணன் (ஒளிரும் உணர்வு) தன்னை ஒரு பக்கமும் தன் சைன்யத்தை ஒரு பக்கமும் வைத்துக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறி, அவ்வாறே இரு சாராரையும் தங்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டபோது பாண்டவர்கள் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தனர். கிருஷ்ணன் இருக்கும் பக்கமே வெற்றி என முன்கூட்டியே பூடகமாக நிச்சயமானது.
கிருஷ்ணன், அர்ஜூனன் தேருக்கு சாரதி ஆனார். இந்தத் தேர் ஐந்து குதிரைகளுடன் (ஐந்து புலன்கள்) உடைய மனித உடம்பின் அடையாளம்.
5.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அட்டைப்படம் உள்பக்கம்
1. பகவத்கீதைக்கு ஆதிசங்கரரின் விரிவுரை மிக ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது
2. பகவத்கீதை மிகவும் மதிக்கப்படும் ஒரு யோகா கிரந்தமாகும்
3. இந்து மதத்தின் வெவ்வேறு தத்துவ உட்பிரிவுகள் தங்களின் ஆதாரத்தை பகவத்கீதையில் காண்கின்றன
4. திரு. ராய் யூஜின் டேவிஸ், கிரியா யோகத்தின் வெளிச்சத்தில் பகவத்கீதையின் உட்பொருளை விவரிக்கிறார்
5. கடவுள் இருக்கிறார் எனும் உண்மை, பிரபஞ்சத்தின் வெளிப்பாடு நடைபெறும் வளர்போக்கு, ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் உயர் அறிவும், ஆத்ம முழுமையும் ஆகியன பகவத்கீதையில் 700 சுலோகங்களில் புரியவைக்கப்படுகின்றன
6. சுய விழிப்புணர்வு பெறவும், ஆக்கபூர்வ செயற்பாடுகளில் ஈடுபட்டு சொந்தக் கடமைகளைச் செய்யவும், கிரியா யோகா செய்யவும்
பகவத்கீதை ஊக்கமூட்டுகிறது
7. கிரியா என்றால் செய்கை. யோகா என்றால் இணைப்பு.
8. ஆத்ம விழிப்புணர்வை இறைவனுடன் இணைப்பது சமாதி.
ஆ சிந்தனைக்கீற்று Reflections
மூலச்சுலோகம் அடங்கிய நூல் அதாவது கிரந்தம்.
மூலச்சுலோகங்களும் பதவுரை, விளக்கவுரை அடங்கிய நூல்.
மூலச்சுலோகம் விளக்கவுரை, விரிவுரை அடங்கிய நூல்
என மூன்று வகை நூல்களில் Eternal Way மூன்றாவது வகை. அதில் மூலச்சுலோகங்கள் இல்லை. அந்த இடத்தில் அதன் ஆங்கில அர்த்தம் உள்ளது.
15.4.2020
முன்னுரைக்கு முன் உள்ள பக்கம்
இதில் ஒரு வேத மந்திரம் உள்ளது
கருத்துச்சுருக்கம் Rephrashing
ஆநந்தமே இயல்பாய் உள்ள உயர் ஆசானுக்கு, உண்மைக்கு என் மரியாதை!
உயர் மகிழ்ச்சி தருபவன், தூய ஞானம் ஆனவன், ஆகாயத்தைப் போல் குணங்களுக்கு அப்பால் உள்ளவனும், முடிவற்றவனும் ஆனவன்,
வார்த்தைகளில் அடங்காதவன், ஒன்றானவன், நிலையானவன், தூய்மையானவன், அசைவற்றவன்,
எல்லா மாறுதல்களைக் கடந்தவன், எல்லா அம்சங்களைக் கடந்தவன்,
நம் எல்லா எண்ணங்களின் உணர்வுகளின் நிசப்த சாட்சிக்காரன்,
அந்த உயர் ஆசானுக்கு, உண்மைக்கு என் மரியாதை!
- ஒரு புராதன வேத மந்திரம்
16.4.2020 ஆசிரியரின் கூற்று
கருத்துச்சுருக்கம் Rephrasing
முதல் 2 பாரா ஏற்கனவே அட்டை உள்பக்கம் 14 4 2020 ல் உள்ளது…….அதன் தொடர்ச்சியாக….
1. கீதையின் மையக்கரு
அ. நாம் செய்யும் அனைத்தும் இறைவிருப்பத்திற்கு உட்படுத்திச் செய்தல்
ஆ. அதாவது, பரிணாம நோக்கத்திற்கு உட்படுதல்
இ. ஆத்ம விழிப்புணர்வை அறிதலுக்கும் கட்டுடைத்தலுக்கும் அனுசரணையாக இருத்தல்
2. இதனால்
அ. இயற்கையுடன் இசைந்த வாழ்வும்
ஆ. அகங்காரத்தின் சுத்தீகரிப்பும்
இ. ஆத்மாவின் லட்சியத்தின் நிறைவேற்றமும்
சாத்தியமாகிறது
3. என் குருவாகிய பரமஹம்ச யோகாநந்தரிடமிருந்து அவருடைய வார்த்தை வழியாகவும் அவரே வாழ்ந்து காண்பித்த வழியிலும் நான் கற்றவை
அ. கடவுளை எவ்வாறு அறிவது ?
ஆ. பொய்யிடமிருந்து உண்மையை விவேகித்துப் பிரித்தறிதல்
இ. உள்காட்சித் தூண்டலால் வாழ்வது
ஈ. அனைத்து ஆத்மாக்களிடமும் இயல்பாய் குடிகொண்டுள்ள வளர்முகத் திறவு நடைபெற எவ்வாறு அனுசரணையாய் இருப்பது
4. S ராதாகிருஷ்ணன், ஆதிசங்கரர், ஸ்ரீயுக்தேஷ்வர், லாஹிரி மஹாசாயா ஆகியோரின் கீதை விரிவுரைகள் உதவியாயிருந்தன.
17.4.2020 முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. வாழ்க்கையின் வளர்போக்குகளைப் புரிந்துகொள்ளவும், உள்ளுணர்வுக்கு ஒளியூட்டுவதும், ஆத்மாவை விடுவிப்பதும் நோக்கமாகக் கொண்ட, வேகமான அதிகாரப் பூர்வ வழிகளை அனுசரிக்க ஆர்வமுறும் ஒவ்வொருவருக்கும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள உண்மைகள் பெருமதிப்பு மிக்கவை.
2. சாதாரண தோற்றமாயை கொண்டுள்ள, புலனாளும் இந்த மனித இருப்பு,பெரும்பாலும் துன்பம் மிக்கதாகவும், அர்த்தப்படும் காரணங்கள் அற்றதாகவும் உள்ளது
3. எது தேவை என்றால்
a. ஆத்மாவின் உள்ளொளியால் வெளிச்சமாக்கப்படும் மனம்
b. ஆத்மாவின் முடிவெடுப்புச் சுதந்திரத்திற்குக் கட்டுப்படும் புலன்கள்
4. இதனால்
a. ஆத்ம உள்ளுணர்வு உள்ளும் புறமும் விரவுகிறது
b. ஆத்ம தூண்டலின் திசை காட்டலில் வாழ்க்கை நடக்கிறது.
c. இதனைத்தான் கருணை என்கிறார்கள்
5. இந்தக் கருணை, கடவுளின் ஆத்மா (நம்மில்) குடிகொண்டுள்ளதான தன்மையினை ஆட்கொண்டு வாழ்விற்கான காரணத்தைப் பூர்த்தி செய்கிறது.
18.4.2020 முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. வெளிக்காட்சிக்குப் புலப்படத்தக்கத் தோற்றங்களையும், மாறிப்போகும் வரலாற்றினையும் கூறவந்ததாக பகவத்கீதை மேலோட்டமாகத் தோன்றினாலும், கதாபாத்திரங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் ஆகியன கருத்துகளையும் தத்துவங்களையும் பூடக வார்த்தைகளால் நாடகமாக நடத்துகிறது
2. உள்காட்சித் தூண்டல் உள்ள வாசகருக்குப் பின்வருபவை புலப்படும்
அ. ஆத்மாவாகிய தன்னை, உடல் / மனச் சூழலில் சுயபிரக்ஞையுடன் ஈடுபடுபவனாக அறிவதிலிருந்து தட்டியெழுப்பி, தான் தூய பிரக்ஞை எனும் உண்மை கதியைப் புலப்படுத்தும்
ஆ.இந்த வளர்போக்கில் எதிர்படும் பொதுச் சவால்கள்
இ. இடறலுண்டாக்கும் அனைத்திடமிருந்தும் விடுவிப்பதான அறிவு
19.4.2020 முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Rephrasingஅ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. வெளிக்காட்சிக்குப் புலப்படத்தக்கத் தோற்றங்களையும், மாறிப்போகும் வரலாற்றினையும் கூறவந்ததாக பகவத்கீதை மேலோட்டமாகத் தோன்றினாலும், கதாபாத்திரங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் ஆகியன கருத்துகளையும் தத்துவங்களையும் பூடக வார்த்தைகளால் நாடகமாக நடத்துகிறது
2. உள்காட்சித் தூண்டல் உள்ள வாசகருக்குப் பின்வருபவை புலப்படும்
அ. ஆத்மாவாகிய தன்னை, உடல் / மனச் சூழலில் சுயபிரக்ஞையுடன் ஈடுபடுபவனாக அறிவதிலிருந்து தட்டியெழுப்பி, தான் தூய பிரக்ஞை எனும் உண்மை கதியைப் புலப்படுத்தும்
ஆ.இந்த வளர்போக்கில் எதிர்படும் பொதுச் சவால்கள்
இ. இடறலுண்டாக்கும் அனைத்திடமிருந்தும் விடுவிப்பதான அறிவு
19.4.2020 முன்னுரை
1. நாம் கீழ்கண்டவைகளுக்கு வழி நடத்தப்படுகிறோம்
• உடல் தளத்தில் வைத்துப் பொருத்திக் கொள்ளும் ஆத்ம—மன—உடல் இருப்பாகிய நாம், புலன் தூண்டலாலும்,, உள்ளுணர்வுத் தூண்டலாலும் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள
• சவாலில் தேறுவதற்கும், பாதுகாப்பு, நலம், மற்றும் தொடர்வளர்ச்சி ஆகியனவற்றுக்குத் தேவையான அத்யாவஸ்யமானவைகளில் திருப்தியடைய
2. இதற்காக
• இயற்கையின் வளர்போக்கு
• வாழ்க்கையை வளர்ப்பதான அபிலாஷைகளை எளிதில் நிறைவேறுதல்
• தேவைகளின் இயல்பூக்கத் திருப்தியை அனுபவித்தல்
• நம் ஆத்ம பொக்கிஷத்தை அறிதலும் அதற்குத் திறவாகுதலும்
ஆகியவற்றுடன் உள்ளார்ந்த இசைவுடன் வாழ விரும்புகிறோம்
3. ஆத்ம விழிப்புணர்வு சரியாக அறியப்படாத போது, நம்முடைய பெருமளவு கவனம், உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளை திருப்திப் படுத்துவதாய், ஆத்ம வளர்ச்சியை அலட்சியம் செய்வதாய் இருக்கப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.
4. இந்த நடத்தைகள் மேம்போக்கான மனித மகிழ்ச்சிக்கு இட்டுச் சென்றாலும், ஆழ் இதயத்தில் குடிகொண்டுள்ள, மனிதனின் உண்மைச் சாரமான இறை அனுபவத்தையும், ஆத்ம ஞானத்தையும் எழுப்பும் அவாவைத் தணிப்பதில்லை.
20.4.2020 முன்னுரை
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. .சமஸ்கிருத இலக்கியங்களில், முதல் அத்தியாயம் என்பது, புத்தகத்தில் சொல்லவரும் விஷயத்தின் முக்கியக் கருத்துக்கு ஓர் அறிமுகமாக இருக்கிறது.
2. சாரமான கருத்தைப் பெற, முதல் அத்தியாயத்தை கீழ்கண்ட கருத்துகளுக்காக கருத்தூன்றி ஆய வேண்டியுள்ளது
a. பகவத்கீதையை ஆசிரியர் எழுதியதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்
b. கதையின் முக்கியப் பாத்திரங்களின் பெயர்களின் உள்ளார்ந்த அர்த்தத்தை அறிதல்.
3. கீதை, மகாபாரத்தில் ஒரு சிறிய பகுதி.
4. பரதன், மற்றும் அவனுடைய வாரிசுகளின் கதையை சம்பிரதாயமும், நாட்டார் இலக்கியமும் கலந்து, குறிச்சின்ன அடையாளத்துடன் (Symbolism) கூறுகிறது.
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (1).
சந்திர வம்சத்து அரசன் சந்தனு, கங்கை நதிக்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, கங்கை நதியின் பெண்ணுருவத்தைத்தான் பார்க்கிறோம் என்று அறியாமல், அவளைத் தன் மனைவியாக இருக்க வேண்டினான். திருமணம் செய்துகொண்டபின் தான் செய்யும் எதனையும் கேளவி கேட்கக்கூடாது என்றும் அவ்விதம் தலையிட்டால் விட்டுப்பிரிவது எனும் நிபந்தனையுடன் அவள் ஒப்புக்கொண்டாள்.
ஆனால், கங்கை தன் முதல் ஏழு குழந்தைகளை கங்கையில் வீசும் வரை மௌனம் காத்த அரசன், எட்டாவது குழந்தையையும் அவ்வாறு செய்யப் போகும்போது மனம் தாளாமல் கேட்டுவிட்டான். நிபந்தனையின்படி, கங்கை, அந்தக் குழந்தையை அரசனிடம் விட்டுவிட்டு கங்கையில் மூழ்கிக் கரைந்தாள்.
சந்தனு, தன் மகன் தேவவிரதனுடன் வாழ்ந்து வருகையில். வேட்டைக்காக காட்டுக்குச் சென்றான். ஆங்கே, தசராஜன் மகளான சத்யவதியின் அழகில் மயங்கி, தசராஜனிடம் சந்தனு பெண் கேட்டான். அதற்கு தசராஜன் தன் மகளே அவனுக்குப் பிரதம மனைவியாயிருக்க வேண்டும் என்றும் அவளுக்குப் பிறக்கும் மகனே முடிசூட்டப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தான்.
சந்தனு இந்நிபந்தனைகளை மறுத்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினாலும் வருத்தத்துடன் இருந்தான். இதனைக் கவனித்த மகன், காரணத்தை ஊகித்தறிந்து, காட்டுக்குச் சென்று தசராஜனிடம் அவனுடைய நிபந்தனைகளை ஏற்பதாகவும் உறுதி கூறினான். இதனால், இவனுக்கு பீஷ்மர் எனப் பெயரானது. இதற்கு வெல்லமுடியாத, வலிமை மிக்க என்று பொருள்.
22.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (2).
சந்தனு—சத்யவதி திருமணத்திற்குப் பின், அவர்களுக்குப் பிறந்த சித்ராங்கதன், விசித்ர வீர்யன் எனும் இரண்டு மகன்களில் முதலாமவன் சிறுவயதில் இறந்துவிட்டான். இரண்டாமவன் பலவீனன். சந்தனுவின் மரணத்திற்குப் பின், அவன் பெரியவனாகி முடிசூட்டப்பட்டாலும், ஆட்சிப்பொறுப்பு பீஷ்மரைச் சேர்ந்தது.
விசித்ரவீர்யன் இளைஞனான போது, அவனுக்குத் திருமணம் செய்விக்க நினைத்த பீஷ்மர், காசி மன்னன் அறிவித்த சுயம்வரத்திற்கு அவனை அழைத்துச் சென்றார். காசி மன்னனுக்கு திருமண வயதில் மூன்று மகள்கள் இருந்தனர். சுயம்வரக்கூட்டத்தில் அவர்கள் தனிமைப்பட்ட போது, பீஷ்மர் அம்மூவரையும் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்.
அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்பன அவர்களின் பெயர்கள். அவர்களில், அம்பா, தான் வேறொருவனைக் காதலிப்பதாகவும், விட்டுவிடுமாறும் வேண்டிக்கொண்டதால், அவள் விடப்பட்டாள்.
பிற இருபெண்களையும் மணந்த விசித்ரவீர்யன், பலவீனம் காரணமாக இறக்க நேர்ந்தது. இரு பெண்களும் வேதவியாசருக்கு அறிமுகம் செய்யப்பட்டார்கள். அவர் மூலமாக அம்பிகாவிற்கு கண்பார்வையற்ற திருதராஷ்ட்ரன், அம்பாலிகாவிற்கு பாண்டு எனும் புத்திரர்கள் பிறந்தார்கள். இருவரும் பெரியவர்களானபோது, பார்வையற்ற திருதராஷ்ட்ரனை விட்டு, பாண்டுவை மன்னராக்கினார்கள்.
பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி எனும் இரண்டு மனைவிகள். திருமணமாகுமுன்பே, குந்திக்கு, தான் கற்ற ஒரு மந்திரத்தை சூரியனிடம் ஓதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் அது முறை தவறிப் பிறந்த காரணத்தால் ஒரு தச்சனுக்கு தத்து கொடுக்கப்பட்டு, கர்ணன் எனும் பெயரில் வளர்ந்தான்.
இறை சக்தியால் குந்தி, தர்மத்தைக் கட்டுப்படுத்தி யுதிஷ்டிரரையும், பிராணனைக்கட்டுப்படுத்தி பீமனையும், இந்திரனைக் கட்டுப்படுத்தி அர்ஜூனனையும் மகன்களாகப் பெற்றெடுத்தாள். அவள், அந்த மந்திரத்தை மாத்ரிக்கு கற்றுக்கொடுத்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். ஆனால், அதனை இரண்டு தெய்வங்களுக்குப் பிரயோகித்து, இரட்டையர்களான நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் என்பதால் பாண்டவர்கள் என ஆழைக்கப்பட்டனர்.
பஞ்சபாண்டவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். துருபத மன்னன் தன் மகள் திரௌபதிக்கு மாப்பிள்ளை தேட சுயம்வரம் நடத்தினான். சுற்றிக்கொண்டிருக்கும் சக்கரத்தின் மேல் உள்ள ஒரு மீனின் கண்ணை, தரையில் இருக்கும் தண்ணீர்த் தேக்கத்தில் அதன் நிழலைப் பார்த்து அம்பு எய்ய வேண்டும் என்பது போட்டி. அர்ஜூனன் அதில் வென்று, அனைவரும் இல்லத்திற்குத் திரும்பி வாசலில் நின்று தாயான குந்தியை அழைத்தனர். அவளோ, “எது கொண்டு வந்திருந்தாலும் ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்” பதில் கூறிவிடவே, திரௌபதி ஐவருக்கும் மனைவி ஆனாள்.
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதைக்குத் தொடர்புடைய மகாபாரதக் கதைச்சுருக்கம் (3).
கண்பார்வையற்ற திருதராஷ்ட்ரன் 100 மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். பாண்டு இறந்த பிறகு திருதராஷ்ட்ரனின் முதல் மகனான துரியோதனன், தன் தந்தைக்கு மறுக்கப்பட்ட ஆட்சிப் பதவி தனக்கே என உரிமை கொண்டாடினான். ஆனால், யுதிஷ்டிரனுக்கு ஆட்சிப்பொறுப்பு வழங்கப்பட்ட போது, சூழ்ச்சி செய்து அவனை ஆட்சியிலிருந்து இறக்கப் பார்த்தான். சூழ்ச்சிக்காரன் ஒருவனின் ஆலோசனையின் பேரில் துரியோதனன், யுதிஷ்டிரனை சதுரங்க சூதாட்டத்திற்கு அழைத்தான். வெல்பவருக்கு ராஜ்யம், தோற்பவருக்கு 12 ஆண்டுகள் வனவாசம், 1 ஆண்டு அக்ஞாத வாசம் என முடிவானது. போட்டியில் தோற்ற யுதிஷ்டிரன் தன் நான்கு சகோதரர்களுடனும், திரௌபதியுடனும் வனவாசம் சென்றான்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சபாண்டவர்கள் திரும்பி வந்து ஆட்சிப்பொறுப்பு கேட்டபோது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பாரதப்போர் நடத்த முடிவானது. கிருஷ்ணன், பாண்டவர்களின் அத்தை மகன், தன் சைன்யம் ஒரு பக்கமும், தான் ஒரு பக்கமும் இருக்க விரும்புவதாகவும், படைகள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டான்.
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
இந்தக் கதையைப் பற்றி என்ன நினைப்பது ? (இங்கு கதையின் போக்கினை மீண்டும் சுருக்கமாகப் பட்டியலிடுகிறார்) இந்த நாடகத்தைப் புரிந்து கொள்ள, கதாபாத்திரங்களின் பெயர்களின் அர்த்தத்தையும், அவர்களின் செயல் மற்றும் அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனைச் செய்ய
----நாடகத்தில் பங்கேற்பவர்களின் விசேஷித்த நடத்தைகளையும்
---மரபு வாரிசு முறையின் பூடகப்பொருளையும்
எண்ணிக்கைகள் மற்றும் உணர்வு மண்டல அலகுகளின் வகைப்பாட்டினை விளக்கும் சாங்கியம் எனும் தத்துவப்பிரிவின் அடிப்படையில் ஆராயவேண்டியுள்ளது.
25.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
இனி, இந்தக் கதைப்பகுதியின் பெயர்களின் பூடக அர்த்தத்தை ராய் கூறியவாறு பார்ப்போம்
சந்தனு (தூய உணர்வு) கங்கையுடன் (ஓம் நுண்ணறிவு) தொடர்பு கொள்கிறார். இதனால், பேருணர்வின் எட்டு பாகங்கள் உருவாகின்றன. அவைகளில் ஏழு அகவயமானவை. ஒன்று புறவயமானது.
அகவய பரவெளி வளர்போக்குகளை கட்டுப்படுத்தும் அந்த மறைவான ஏழு பாகங்களாவன:----
1. படைப்பின் காரண சக்தி சமஷ்டி
2. படைப்பின் காரண சக்தி வியஷ்டி
3. படைப்பின் சூக்ஷம சக்தி சமஷ்டி
4. படைப்பின் சூக்ஷம சக்தி வியஷ்டி
5. படைப்பின் ஸ்தூல சக்தி சமஷ்டி
6. படைப்பின் ஸ்தூல சக்தி வியஷ்டி
7. அனைத்தையும் தழுவியதான ஒரு பாகம்
சில மதங்களில் இவை கடவுள்களாகக் காட்டப்பட்டாலும், இவை வெவ்வேறு தன்மைகள், செல்வாக்குகள் மற்றும் சக்திகள் கொண்டவையாகும்.
26.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
ஆ சிந்தனைக்கீற்று Reflection
திரௌபதி, ஐந்து சக்கரங்களுக்கும் சக்தி அளிக்கும் குண்டலினி சக்தி
27.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
1. படைப்பின் காரண சக்தி சமஷ்டி (முழு)
2. படைப்பின் காரண சக்தி வியஷ்டி (பின்னம்)
இவை இரண்டும் இந்து வேதத்தில் விஷ்ணு என்றும்,
விஷ்ணு, பதம் மாறாமல் காப்பவர் என்றும்
3. படைப்பின் சூக்ஷம சக்தி சமஷ்டி
4. படைப்பின் சூக்ஷம சக்தி வியஷ்டி
இவை இரண்டும் இந்து வேதத்தில் பிரம்மா என்றும்,
பிரம்மா விரிவடைபவர் என்றும் பிரபஞ்ச வெளிப்பாட்டின் காரணமாகவும்
5. படைப்பின் ஸ்தூல சக்தி சமஷ்டி
6. படைப்பின் ஸ்தூல சக்தி வியஷ்டி
இவை இரண்டும் இந்து வேதத்தில் சிவன் என்றும், மகேஸ்வரன் என்றும் மாற்றங்களை நிகழ்த்துபவர் என்றும் விவரிக்கப்படுகின்றனர்.
ஏழாவதான, இறையாத்மா, இந்த ஆறினுள்ளும் மறைவாக, ஆனால் கட்டப்படாமலும் தடுக்கப்படாமலும் உள்ளது.
குறிப்பு – பிரபஞ்சத்தை வெளிப்படுத்தி வாழவைக்கும் உணர்வின் வெளியாகு பகுதி மனித உடம்பினையும், பிற உயிர்களின் உடம்பினையும் வெளிப்படுத்தி வாழவைக்கிறது. தூய பேருணர்வு, பிரபஞ்சத்தில் விரவியும் ஆன்மாக்களாக பாகங்கள் ஆக்கப்பட்டும் இருக்கிறது. சுய விளக்க அறிவால் திறவாகும் ஆன்மா, அதன் அறிவை பிரபஞ்ச பேருணர்வுக்கும் –இந்த இரண்டின் ஒன்றாகுதலுக்கும் ஆன்ம விடுவிப்புக்கும் திருப்பி அளிக்கிறது
28.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
எட்டாவது, மறைவற்ற, பிரபஞ்ச மூலப்பொருள், பீஷ்மர், பேருணர்வின் தனித்துவ, சாட்சிபூத அலகு, வெளி விஷயங்களில் ஈடுபட்டாலும், முடிவுத்தீர்ப்பு நிர்ணயிப்பது அல்ல.
பீஷ்மர், திருமணம் செய்து கொள்ளாததினால் (படைப்புக் காரியத்திலிருந்து விலகியிருப்பது) அவர் ‘யாரையும் உருவாக்கவில்லை.
இவரும் இறையாத்மாவும் பேருணர்வின் இரண்டு முகங்கள். பீஷ்மர், புறவய இயற்கையின் வெளி உருவம். இறையாத்மா அகவயமானது
எங்கும் வியாபித்துள்ள இறையுணர்வு, சமஸ்க்ருத மொழியில் கூடஸ்த சைதன்யன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உச்சியாயிருக்கும் ஒரு அம்சம் என இந்து மதத்தில் சிலர் இதனை கிருஷ்ணப் பேருணர்வு என அழைக்கின்றனர். சில பக்தர்கள் இதனுடனான தங்கள் உறவு நெருக்கத்தை உணர தன்னிச்சையாய் வர்ணிக்கின்றனர்.
29.4.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
உணர்வின் உயீரூட்ட அம்சமான இறையாத்மாவானது, உணர்வு கடந்த மூல இயற்கை (உண்மையின், அதாவது ,”சத்” தின் உருவ வெளிப்பாடான சத்யவதி). மூல இயற்கையை உருவாக்கி அதன் வெளிப்பாட்டுக்குரிய மாற்றங்களை அடைய தொடர்பு கொள்கிறது. இந்த மூல இயற்கை, ஓம் மற்றும் அதன் அம்சங்களான தேசம், காலம், மற்றும் கலனம் என்னும் பிரபஞ்ச சக்திகளாகும்.
அவளுடைய முதல் மகன், சித்ராங்கதன், அதிக ஆயுளில்லாததானது, அருவிலிருந்து பருவுக்கு சிறிது காலத்தில் மாற்றமடைந்ததைக் குறிக்கிறது.
அஹங்காரத்தினை குறிப்பதான இரண்டாவது மகன், விசித்ர வீர்யன், தன் இச்சையில் தோற்றம் பெறுவதாக ஒரு மாயையில் இருப்பவன் என்றாலும், விசித்ரமாகத் தோன்றினாலும், (அவீர்ய) பலமற்றவனாகத் தோன்றினாலும், படைப்புக்கு அது தேவையே. அது சுருங்குவதாலும், கற்பனைத் தோற்றம் உடையதாக இருப்பதாலும், அது சக்தியற்றது. அது அறிவை மறைப்பதன்றி, அறிவு கொண்டதல்ல.
அ கருத்துச்சுருக்கம் Re-phrasing
அஹங்காரம் ஆன விசித்ரவீர்யனின் இரண்டு மனைவிகள்,
• சந்தேகம் (அம்பிகா),
• விவேகம் (அம்பாலிகா).
இன்னொருவனைக் காதலிப்பதால் விடப்பட்ட அம்பா, தாழ்வுதளச் சக்கரங்களின் தூண்டுதல் பெற்றவளாக கருதவேண்டும்.
விசித்ரவீர்யன் இறந்துவிட்டதால், இவர்கள் இருவரும் வேதவியாசருக்கு (ஞானம்) அறிமுகம் செய்யப்பட்டு, அவர் மூலமாக,
• (சந்தேகம்) அம்பிகாவுடன் கண்பார்வையற்ற …… திருதிராஷ்டரனும்,
• (விவேகம்) அம்பாலிகாவுடன் ……. பாண்டுவும்
பிறந்தனர்.
1.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
த்ருதராஷ்டரனுக்கு 100 மகன்கள், 1 மகள். குருட்டு அல்லது மயக்குறு மனம், உணர்ச்சியால் ஆளப்பட்டு எண்ணற்ற சுவாபிமானத் தன்மைகளை உருவாக்குகிறது. அவர்களில் முதலாவதான துரியோதனன் (வேட்கை, முறியடிக்க முடியாததும், பல பிரச்னைகளை உருவாக்குவதுமான கீழான ஆசைகள்)
பாண்டு, திருதராஷ்ட்ரன் இருவருமே குரு வம்சத்தவர்களாக இருந்தாலும் பீஷ்மர் உதவியுடன் ஆண்டதால் திருதராஷ்ட்ரனே அவ்வம்சத்தின் முக்கியப் பிரதிநிதியாகக் கருதப்படுகிறான்.
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பாண்டு, தன் இரு மனைவிகள் – குந்தி (குண்டலினியின் ஈர்ப்பு சக்தி, வேட்கையற்ற இரக்கம், தவறுகளை முறியடிக்கும் விவேகித்த சிந்தனை) –மற்றும் மாத்ரி – இயல்பூக்கத்தில் தூண்டப்படும் நுண்ணறிவு – இவர்கள் காட்டில் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். அதாவது, அவர்கள் தங்களை மனஎழுச்சிகளிலிருந்து (ராஜ்ய காரியங்களிலிருந்து) விடுவித்துக் கொண்டனர்.
உடம்பின் முன்பாகம் உடல், மன இயக்கங்களுக்கும், பின்பாகம் (முதுகெலும்பு) ஆன்மீக இசைவுக்கும் ஆனதென யோகிகள் கூறுகின்றனர்.
திருதிராஷ்டரனின் மகன்கள் கௌரவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மனதிலிருந்து முளைப்பதான சுயநலம், அழிவுப்போக்குகள் என்றும், ஆன்ம ஒளி கூட்டும் புரிதலை அடைய விழையும் உயர் இச்சைகளுக்கு எதிரிகள் எனவும் புரிந்துகொள்ள வேண்டும்.
தூய அறிவு ஆகிய பாண்டு தனியாக இருக்கிறார்.
மனம், திருதிராஷ்டரனைப் போல, ஜட அம்சங்களை ஆள்கிறது
அ கருத்துச்சுருக்கம் Rephrasing அட்டவணை வடிவத்திற்கு பொருத்தமானது
பெயர் | தத்துவம் | பஞ்சபூதம் | சக்கரம் | சக்கரத்தின் பொருள் | ஒலிஅலை | பீஜ மந்திரம் | நிறம் | சுவை |
யுதிஷ்டிரர் | தர்மம் | ஆகாயம் | விசுத்தி | சுத்தமானது | கடலின் கர்ஜீப்பு | ஹூம் | சாம்பல் | புளிப்பு |
பீமன் | பிராண வலிமை | காற்று | அனாஹதம் | ஒலி தாரை | கோவில் மணியோசை | யும் | நீலம் | உப்பு |
அர்ஜூனன் | தூய மனம் | நெருப்பு | மணிபூரகம் | ரத்தினக்கற்களின் நகரம் | யாழ் | ரூம் | சிவப்பு | கடுமையான சுவை |
நகுலன் | மனதின் கீழ்படிதல் | நீர் | ஸ்வாதிஷ்டானம் | சுயத்தின் இருப்பிடம் | புல்லாங்குழல் | ஷம் | சந்திர காந்தம் | மூச்சுத்திணற வைக்கும் சுவை |
சகாதேவன் | தடுக்கும் சக்தி | பூமி | மூலாதாரம் | அடித்தளம் | தொந்தரவுக்குள்ளான தேனீக்களின் ரீங்காரம் | லும் | மஞ்சள் | கசப்பு |
4.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
அட்டவணை வடிவத்திற்கு பொருத்தமானது
திரௌபதி, குண்டலினி சக்தி அதாவது, படைப்பின் உடலளவு பிரதிநிதி. இவளின் ஐந்து மகன்கள் என்பவர்கள் குண்டலினியால் சக்தியூட்டப்பட்ட சக்கரங்களிலிருந்து வெளியாகும் ஒளி, ஒலி அலைகள்.
சதுரங்கம் விளையாடியது
ஆன்மீக வளர்ச்சிப்பாதையில் ஆத்மா தன் உணர்வில் வளரும்போது,, மனவெழுச்சிகளுடன் கூட்டிணைவது என்பது புத்தி பேதலிப்பில் முடியும். இதனைச் சரி செய்ய, ஆன்மீக முயற்சியாளன் சில காலம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஆன்மீக முயற்சிகளை முடுக்கி விட்டு, பின் மீண்டும் தான் தோற்றுப்போன தன் மனவெழுச்சிகளைச் சந்தித்து, தன் வெற்றியை உறுதி செய்தலானது, பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றதும், மீண்டும் போரிட வந்ததும் குறிக்கிறது.
பார்த்த சாரதி
கிருஷ்ணன் (ஒளிரும் உணர்வு) தன்னை ஒரு பக்கமும் தன் சைன்யத்தை ஒரு பக்கமும் வைத்துக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறி, அவ்வாறே இரு சாராரையும் தங்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டபோது பாண்டவர்கள் கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்தனர். கிருஷ்ணன் இருக்கும் பக்கமே வெற்றி என முன்கூட்டியே பூடகமாக நிச்சயமானது.
கிருஷ்ணன், அர்ஜூனன் தேருக்கு சாரதி ஆனார். இந்தத் தேர் ஐந்து குதிரைகளுடன் (ஐந்து புலன்கள்) உடைய மனித உடம்பின் அடையாளம்.
5.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
ராய், மீண்டும் பகவத் கீதையின் மேம்போக்கான மற்றும் உள்ளார்ந்த அர்த்த விசேஷங்களை பற்றி நினைவுபடுத்தி, இரண்டும் அதனதனளவில் பொருளுடையது என்கிறார்.
சஞ்சயன், தூரதிருஷ்டிப்பார்வை பெற்று பார்வையற்ற திருதராஷ்டரனுக்கு அரண்மனையில் அமரந்தவாறே, தானும் அருகில் அமர்ந்து கொண்டு போர்க்களத்தில் நடப்பதை விவரிக்கிறார்.
திருதராஷ்ட்ரனின் முதல் கேள்வியோடு கீதை துவங்குகிறது…
“தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போராடும் நோக்கத்தோடு
கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்கிறார்கள் ?”
6.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
தர்மம் என்பது உண்மை, ஒழுக்கம். அது படைப்பின் எண்ணமான திருஉருமாற்றம் வளர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றினைத் தாங்கி நிற்கிறது.
வாழ்வை வளமாக்கும் பேருணர்வின் துடிப்பு அனைத்தும் தர்மம்.
க்ஷேத்ரா என்பது நிகழிடம். "குரு" (kuru) என்பது மயக்குறு மனத்தின் தன்மைகள்.
உண்மையானது பொய்யை சந்திக்கும் களத்தில் நடக்கும் நாடகத்தை இந்த ஸ்லோகம் முன்வைக்கிறது.
இந்தக் களம் எங்கே இருக்கிறது ? ஆன்மாவின் முழுமையை மீட்கும் உணர்வை இந்தக் கதை விளக்குவதால், இது பக்தனின் வியக்த உணர்வில் (Individualized awareness) நடப்பதாகக் கொள்ள வேண்டும்.
7.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
அர்ஜுனனின் கேள்விகள்,
- ஆன்மாவின் சுய விழிப்புணர்வுக்கும்
- இறை ஞானத்திற்கும்
- அதில் எதிர்படும் இடையூறு, போராட்டங்கள், உண்மையை அறிவதும் அதனை நடைமுறைப் படுத்துவதைக் கற்றலுமாகிய முயற்சிகள்
ஆகியனவற்றின் சாட்சியாக இருக்கின்றன
இந்தக் கதையில், அர்ஜுனன், தன் கடமையைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு போர் வீரனாக சித்தரிக்கப்படுகிறான். அவன், ஆன்ம வளர்ச்சியில் ஒரு இடறலான பக்குவ நிலையில், உருவ மற்றும் மனோ தளப் புரிதலில் இன்னும் வலுப்படவேண்டிய ஒருவனை, அதே சமயம், உயர்ஞானப் பொருண்மைக்குத் திறவாக ஆரம்பித்தவனைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறான். (மூன்றாம் சக்கரத்தின் தன்மை)
திறவாதல் படிநிலைகள் கீழ்கண்டவாறு இருக்கும்:
- குழப்பத்திலிருந்து விடுபட்டு அஹங்காரக் குத்து ஏதுமற்ற ஒரு பக்தன் ஆகுதல் (மூன்றாம் சக்கரத்திலிருந்து நான்காம் சக்கரத்திற்கு)
- மேல்நிலை உண்மைகளை அறிய ஆரம்பித்தல் – நான்காவது சக்கரத்திலிருந்து ஐந்தாவது சக்கரத்திற்கு
- மேல்நிலை உண்மைகள் உதயமாதல் –ஐந்தாவது சக்கரத்திலிருந்து ஆறாவது சக்கரத்திற்கு
- தன்னிடம் பூர்வாங்கமாக இருந்த அறிவுக்குத் திறவாகி அது பேருணர்வு வெளிச்சம் பெறுதல்
8.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதை அத்தியாயங்கள் | பொருள் | துணைப்பொருள் |
1 --- 10 | ஞானயோகம் – அறிவுத் தேட்டம் கர்ம யோகம் – lதன்னலமற்ற பணி பக்தி யோகம் – இறைபக்தி, சரணாகதி | தியானம். மன இறுக்கத்தைக் களைவதான தத்துவங்கள் |
11 | பேருணர்வு எங்கும் வியாபித்திருக்கையை, கிருஷ்ணனின் அருளால் அர்ஜுன்ன்காணல் | |
12 --- 18 | இறைஞானம் தந்த புதிய உயர்தள வாழ்க்கையில் அந்த அறிவை உலகஇருப்புப் பின்னலில் ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவது |
கிருஷ்ணன், அணுகுசாத்தியமான, கருணை பொழியும் இறை சத்தியமான, சர்வ வியாபக, சர்வ ஞான, சர்வ வல்லமையுள்ள, ஆனாலும், ஒவ்வொரு ஆன்மாவிலும், படைப்பிலும், தோய்ந்திருப்பவன்.
அவனுடைய வார்த்தைகள், ஒரு வரலாற்றுப் புருஷனின் சகஜப் பேச்சாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை, இறை ஆத்மாவைப் பறைசாற்றும் அறிவாக, ஒருவன் அறிந்து எதிர்கொள்ளக்கூடிய, தன் உள்பாகத்திலிருந்து திறந்து வெளிவருதலைப் பிரதிநிதிப் படுத்துவதாகும்.
9.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
பகவத்கீதை படிக்கும்போது, நிகழ்ச்சிகளையும், பாத்திரங்களின் பெயர்களையும் கால, தேசங்களுடன் இணைத்துப்பார்க்காமல்,
• ஒவ்வொருவனின் புரிந்துகொள்ளும் ஆர்வத்தையும்,
• பூர்வாங்க இயங்கா ஆற்றலைத் திறந்து அனுபவிக்க மேற்கொள்ளும் சுயமுயற்சியையும்
நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
• அர்ஜுனனைப் பற்றிய விவரம் வருகையில், உங்களின் சில குணாதிசயங்களையும்,
• கிருஷ்ணனைப் பற்றிய விவரம் வரும்போது, உங்களிடமே இருக்கும் மனதை ஒளியூட்டுவதான, ஆத்மாவை விடுவிப்பதான அறிவையும்
நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
10.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
இங்கே, வாசிப்புத் தொடர்ச்சியை எளிமைப்படுத்த, பாத்திரப் பெயர்களின் உள்ளர்த்தம் தரப்படுகிறது:
• அபிமன்யு – உயர்மனத்தினன்
• அம்பாலிகா – விவேகம்
• அம்பிகா – சந்தேகம்
• அநந்தவிஜயா – முடிவில்லா வெற்றி
• அர்ஜுனன் – தூய மனத்தினன்
• அஸ்வத்தாமன் – அழியும் பொருளை இச்சித்தல்
• பீமன் –முடிவற்ற ஆற்றல்
• பீஷ்மர் ---ஆணவ மூலம்
• பூரிஸ்ரவஸ் –பக்தியற்றவன்
• சேகிதானன் --- உயர் நுண்ணறிவாளன்
• சித்ராங்கதன் –ஓம் ஒலியின் கணப்பொழுது வகைமாறுதல்
• தேவதத்தன் - இறை சக்திக்குப் பணிதல்
11.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
வாசிப்புத் தொடர்ச்சியை எளிமைப்படுத்த, பாத்திரப் பெயர்களின் உள்ளர்த்தம் தரப்படுகிறது
• த்ருஷ்டத்யும்னன் –-- ஆன்மீகச் சக்திகளின் தலைவன்
• த்ருஷ்டகேது – யோகத் தடை நீக்கம்
• திருதராஷ்ட்ரன் – மயக்குறு மனம்
• திரௌபதி – குண்டலினி சக்தி
• துரோணர் – லௌகீக தள அனுபவத்தின் புரட்சி, விதியின் முடிவுக்கேற்ற வாழ்வகையை ஆதரித்தல், கட்டுப்படுத்தியோ, நீர்க்கச்செய்தோ, கடந்து சென்றோ ஆகிய வழிமுறைகளால் நிறுத்தினாலன்றி ஆக்கத்திற்கோ அழிவுக்கோ பயன்படக்கூடிய அனுபவச் சுவடுகள். அவைகளின் ஆதிக்கம் மனத் தடுமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
• துருபதன் – தூய அன்பு
• துரியோதனன்- - கீழாசைகளின் நிறைவேற்றத்தில் உறுதிப்பாடு
• காந்தாரி – செயலையும், அதன் முடிவையும் ஏற்கும் மனத்தின் பாகம்
• காண்டீபம் -- இறைமைக்குப் பாலம்
• ஹனுமான் – விவேகித்த விசாரணைத் தத்துவம்
• கங்கை – இறையாக்க சக்தி
• கர்ணன் --- தன்னிச்சையான ஆசை. மனத் தீர்மானத்தால் முறியடிக்கப்பட்டால் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது.
• காசி மன்னன் – உள் அறிவின் ஓளி
• கிருபா – பாகுபாடு அற்ற இரக்கம்
• கிருஷ்ணா – பிரபஞ்ச உடையாளி, உயிர்களின் உண்மையான உள்வஸ்து
ஆ சிந்தனைக்கீற்று Reflection
கிருஷ்ணா – உயிரற்றவைகளின் உள்வஸ்துவும் ஆக இருப்பவன் என்பது சரியாக இருக்கும் ஏனென்றால் பூமியும் ஜடமும் பிரபஞ்சத்தின் பாகங்களே.
யசோதை, கிருஷ்ணனின் வாயைத் திறக்கச் சொன்னபோது அவள் அதில் பிரபஞ்சத்தைப் பார்த்தாள்
12.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)
அ கருத்துச்சுருக்கம் Rephrasing
வாசிப்புத் தொடரச்சியை எளிமைப்படுத்த, பாத்திரப் பெயர்களின் உள்ளர்த்தம் தரப்படுகிறது
• குந்தி - ஈர்ப்பு வீர்யத்துடனான குண்டலினி சக்தி
• குந்திபோஜன் – எதிர்போக்குகளை வென்றதால் எற்படும் அமைதியும் சுகமும்
• குரு (Kuru) --- கௌரவர்கள் (தமஸ்), பாண்டவர்கள் (சத்வம், ரஜஸ்) ஆகியோரின் குலபாட்டன்
• குருக்ஷேத்ரா – எதிரெதிர் குணாதியங்கள் போராடும் ஒவ்வொரு ஜீவனின் உடல் என அறியப்படும் வியக்த உணர்வுக் களம். இது தர்மக்ஷேத்ரா என ஏன் வர்ணிக்கப்படுகிறது என்றால், பரிணாமச் செயல்பாடுகளின் ஒழுங்குக்கிரமமான திறவாக்கத்தில் ஆதரவாயிருந்து, ஆத்மாவின் --(பூர்வாங்கமான ஆன்ம குணாதிசங்களை ஈடேற்றுவதான அதன்) -- பேரார்வத்தை செயல்படுத்தும்
• மாத்ரி – இரக்கமுள்ள ஆன்மீக நுண்ணறிவு
• மணிபுஷ்பகம் –பேரறிவாளனின் ஆன்மீக சக்திகள்
• நகுலன் –அநீதியின் அந்தரங்க எதிர்ப்பாளன்
• பாஞ்சஜன்யா – ஓம் ஒலியின் பிரதிநிதியாக, சர்வ வியாபகமாய் எல்லா படைப்பிலும் கரைந்துள்ள கிருஷ்ணனின் இறைப் பேருணர்வு
• பாண்டு –தூய நுண்ணறிவு
• பௌண்ட்ரம் --- எல்லா எதிர்ப்பையும் வெல்லும் தைரியம்
• காசி இளவரசன் – ஆன்ம ஒளி
• புருஜித் – ஸ்தூல ஜடங்களை விலக்கி, அவைகளின் ஊடுருல் பொது அம்சங்களை, காட்டப்படாவிட்டாலும் பார்க்கத் தெரிவதான ராஜயோகத்தின் ஐந்தாம் நிலை
• சகாதேவன் – இறையுணர்வு
• சைப்யன் (சைவ்யன்) – ஆன்ம விடுதலையைத் தருவதான திருக்காட்சி உள்ளொளி
• சஞ்சயான் –முழு வெற்றியாளன்
• சந்தனு -- ஓம் ஒலியை இணைத்துக் கொள்வதான சநாதன அமைதி
ஆ சிந்தனைக்கீற்று Reflection
பூமியும் ஜடமும் பிரபஞ்சத்தின் பாகங்களே.
13.5.2020 முன்னுரை (தொடர்ச்சி)

• சாத்யகி – கிருஷ்ணனின் தேரோட்டி. தடையை எதிர்கொள்ளும் உண்மை
• சத்யவதி – சத்யத்தை உருவகப்படுத்தும் ஓம் ஒலி, மூல இயற்கையாக வெளிப்படுதல்
• சிகண்டி – ஆன்மீகத்தின் வெளி வட்ட ஒளி
• சோமதத்தன் – நிலையாமை
• சுபத்ரா – அன்பின் காரணமாக மங்கலமாயும் மகிழ்ச்சியாயும் இருத்தல். அர்ஜுனனின் (ஒரு) மனைவி
• சுகோஷா – இசைவாற்றல்
• உத்தமௌஜஸ் – உயர் ஆற்றல்
• விசித்ரவீர்யன் – தன் இருப்புக்கு தானே மூலம் எனும் பொய் அறிவு
• விதுரர் – தூய பேருணர்வை அறிந்த நிலை
• விகர்ணா – விரும்பாமை
• விராடன் – ஆன்மீக கண்ணால் உள்காட்சி
• யுதாமன்யு –வேட்கையற்றிருத்தல்
• யுதிஷ்ட்ரன் –தர்மம்
இறையனுபவத்திற்கு இட்டுச்செல்லுதல் எனும் அர்த்தத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் யோகம் என முடிகிறது
யோகா என்பது
• பயிற்சி அல்லது வழிமுறை
• வியக்த உணர்வு பேருணர்வுடன் சங்கமித்தலாகிய சமாதி
முழுமை என்பது ஆன்மஉணர்வின் இயல்பாகையால், அதனை இனி உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகவோ, அடையப்பட வேண்டிய ஒன்றாகவோ கருதப்படுவதில்லை.
அமிழ்ந்திருக்கும் ஆன்ம உணர்வை, அந்த அமிழ்விலிருந்து வெளிப்படுத்தி தூய உணர்வுக்கு மீட்பதே முழுமையின் அனுபவம்.
ஆ சிந்தனைக்கீற்று Reflection
• அமிழ்ந்திருக்கும் ஆன்ம உணர்வை, அந்த அமிழ்விலிருந்து வெளிப்படுத்தி தூய உணர்வுக்கு மீட்பதே முழுமையின் அனுபவம். இதனைத்தான் பதஞ்சலி மகரிஷி
யோகா, மனமாசு அகற்றுதல் என்கிறார்.

முன்னுரை நிறைவு பெற்றது
Comments
Post a Comment